1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: திங்கள், 18 ஜூலை 2016 (16:31 IST)

சுவாதி ஆணவக் கொலை செய்யப்பட்டிருக்கலாம்: அடுத்தடுத்த குண்டுகளை வீசும் திருமாவளவன்!

சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் வெட்டிப்படுகொலை செய்யப்பட்ட இளம்பெண் சுவாதி வழக்கில் அடுத்தடுத்து பரபரப்பு கருத்துகளை கூறிவருகிறார் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன்.


 
 
ஏற்கனவே தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த திருமாவளவன் சுவாதி முஸ்லீம் மதத்திற்கு மாற இருந்தார் எனவும், ரமலான் நோன்பு இருந்தார் எனவும் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். மேலும் ஆர்.எஸ்.எஸ். தரப்பினருக்கு இது தெரியும் எனவும் கூறினார்.
 
திருமாவளவனின் ஆர்.எஸ்.எஸ். குறித்த இந்த கருத்துக்கு பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா கடுமையாக கண்டனம் தெரிவித்து வழக்கு தொடரப்போவதாக அறிவித்தார்.
 
இந்நிலையில் இன்று பண்ருட்டியில் செய்தியாளர்களை பேசிய திருமாவளவன் சுவாதி ஆணவக் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று தெரிவித்தார். மேலும் இது போன்ற சந்தேகத்தை முதலில் வெளிப்படுத்தியது புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி தான் எனவும் என்னுடைய கருத்தை ஹெச்.ராஜா திசை திருப்ப முயல்கிறார்கள் என்றும் கூறினார்.