வியாழன், 16 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Modified: வியாழன், 1 செப்டம்பர் 2016 (13:24 IST)

நயன்தாரா உதட்டில் கிஸ் அடித்தது மகிழ்ச்சி : சொல்வது யார்?

நயன்தாரா உதட்டில் கிஸ் அடித்தது மகிழ்ச்சி : சொல்வது யார்?

நயன்தாரா உதட்டில் தன் மகன் முத்தம் உதட்டோடு உதடு வைத்து முத்தமிடும் வீடியோவை சமீபத்தில் ஒரு பெண் பேஸ்புக்கில் வெளியிட்டார்.



சமீபத்தில், ஒரு சிறுவன் நடிகை நயன்தாராவின் உதட்டில் முத்தம் கொடுக்கும் வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை கிளப்பியது. அதன்பின் அது ‘திருநாள்’ திரைப்படத்தில் இடம் பெற்ற ஒரு காட்சி என்பதும், அந்த வீடியோவை பேஸ்புக்கில் வெளியிட்டது, முத்தம் கொடுத்த சிறுவனின் தாய் ஜோதி என்பதும் தெரிய வந்தது.

தன் மகன் நயன்தாராவுக்கு முத்தம் கொடுத்ததை தம்மட்டம் அடித்துக் கொள்ளவே அவர் அந்த வீடியோவோவை வெளியிட்டதாக தெரிகிறது.

ஒரு சிலர் அதற்கு லைக் கொடுத்தாலும், சிலர் திட்டி தீர்த்துவிட்டனர். இதுவே ஒரு கதாநாயகனுக்கு, ஒரு சிறுமி முத்தமிட்டிருந்தால் தாய்மார்கள் சும்மா இருப்பாங்களா என்கிற ரீதியில் கருத்துகள் தெறிக்க, தற்போது அந்த வீடியோவை நீக்கிவிட்டாராம் ஜோதி..