திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By K.N.Vadivel
Last Modified: சனி, 25 ஜூன் 2016 (15:59 IST)

வெடிகுண்டு மிரட்டல் - அலறியடித்து ஓட்டம் எடுத்த போலீசார்

காவல் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னை கோயம்பேடு காவல் நிலையத்திற்கு  வெடி குண்டு மிரட்டல் விடுத்த சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 

 
தமிழகத்தின் தலைநகரான சென்னையில் கோயம்பேடு பேருந்து நிலையம் உள்ளது. இங்கு பொது மக்கள் நலன் கருதி காவல் நிலையம் செயல்பட்டு வருகிறது.
 
இந்த நிலையில், இன்று காலை காவல் நிலையத்திற்கு ஒரு போன் வந்தது. அதில் பேசிய நபர், காவல் நிலயைத்தில் வெடிகுண்டு வெடிக்கும் என கூறிவிட்டு, தொடர்பை துண்டித்துவிட்டார்.
 
இந்த தகவலை போலீசார் தங்களது உயர் அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு சென்றனர். இதனையடுத்து, காவல் நிலையத்திற்கு வெடிகுண்டு தடுப்பு போலீசார் விரைந்து சென்று காவல் நிலையத்தை சோதனை செய்தனர். இந்த சோதனையில் வெடிகுண்டு ஏதும் சிக்கவில்லை. அது வெறும் புரளி என்று தெரிய வந்துள்ளது.
 
இதனையடுத்து, இந்த சம்பவம் குறித்து, வழக்கு பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணையில் இறங்கியுள்ளார்.