வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : வெள்ளி, 30 ஜூலை 2021 (21:03 IST)

பைக் ஓட்டும் போது சீரியல் பார்த்த நபர் !

பைக் ஓட்டும்போது, சீரியல் பார்த்த நபரின் புகைப்படம் இணையதளங்களில் பரவலான நிலையில், அந்த நபரைப் பிடித்த போலீஸார் அவருக்கு அபராதம் விதித்தனர்.

வீட்டில் சீரியல் பார்ப்பது போய், பஸ்ஸில்,காரில், பார்ப்பது அதிகரித்த நிலையில் இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சியால் செல்போனில் நினைத்த நேரத்தில் எந்த நிகழ்ச்சியை வேண்டுமானாலும் பார்க்கலாம். எனவே கோவைச் சேர்ந்த ஒரு நபர் பைக் ஓட்டும்போது, சீரியல் பார்த்த நபரின் புகைப்படம் இணையதளங்களில் பரவலானது.

இந்நிலையில் பைக் எண்ணை வைத்து போலீஸார் அவரைக் கண்டுபிடித்து அபராதம் விதித்தனர். கோவையைச் சேர்ந்த முத்துசாமி என்பவர் தான் பைக் ஓட்டும்போது, சீரியல் பார்த்ததாகக் கூறி அவருக்கு ரூ.1200 அபராதம் வித்தனர் போலீஸார்.