செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Updated : வியாழன், 14 ஜூலை 2016 (16:50 IST)

காதலிக்க மறுத்த 9ஆம் வகுப்பு மாணவியை கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை

கரூர் அருகே காதலிக்க  மறுத்த  9 ம் வகுப்பு  படிக்கும்  மாணவியை  குத்தியால்  குத்தி கொலை  செய்த  வழக்கில்  கட்டிட  தொழிலாளிக்கு  ஆயுள்  தண்டனை  விதித்து மகளிர் விரைவு  நீதிமன்ற நீதிபதி  தீர்ப்பு அளித்துள்ளார்.

 

கரூர்  மாவட்டம்,  சின்னதாராபுரத்தை  அடுத்த  ரெங்கம்பாளையத்தை சார்ந்தவர் ஈஸ்வரன் அவரது  மனைவி  ஈஸ்வரி. கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார்.  இவரது மகள் பாரதி பிரியா (வயது 14). இவர் அங்குள்ள சின்னதாராபுரத்தில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 9 ம் வகுப்பு படித்து வந்தார்.  

இவர்களது  பக்கத்து  வீட்டில்  வசிக்கும் நடராஜ் என்பவரது  மகன்  மனோஜ்,  24 வயதான இவர் கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார்.  பாரதி பிரியாவுக்கு  காதலிப்பதாக  கூறி  தொல்லை  கொடுத்து  வந்ததாக கூறப்படுகிறது.  

இந்நிலையில்  கடந்த  07.01.2015  அன்று  காலை  பாரதி பிரியா  வழக்கம்  போல் பள்ளிக்கு  சென்ற வரை  பின்  தொடர்ந்து  வந்த  மனோஜ்,  பாரதி பிரியாவை வழி மறித்து  மறைத்து  தான்  வைத்திருந்த  கத்தியால்  பல  இடங்களில் குத்தியுள்ளார்  அதனை  தொடர்ந்து  தானும்  கத்தியால்  குத்திக்  கொண்டு இரண்டு  பேரும்  சாலையில் விழுந்துள்ளனர்.  

இதனையடுத்து  2  பேரை  மீட்ட  கிராம  மக்கள்  ஆம்புலன்ஸ்  மூலம் மருத்துவமனைக்கு  அனுப்பி  வைத்தனர்.  மருத்துவமனைக்கு  வரும் வழியிலேயே  பாரதி பிரியா  உயிரிழந்தார்.  ஆபத்தான  நிலையில்  தனியார் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்ட  மனோஜிற்கு   சிகிச்சை  அளிக்கப்பட்டது.  

இது  தொடர்பாக சின்னதாராபுரம்  காவல் நிலைய  போலீசார்  வழக்கு  பதிவு செய்து  கரூர்  மகளிர்  விரைவு நீதிமன்றத்தில்  வழக்கு  நடைபெற்று  வந்தது. இன்று  இதனை  விசாரித்து  மகளிர்  விரைவு நீதிமன்ற  விரைவு  அமர்வு  நீதிபதி குணசேகரன்,  குற்றவாளி  மனோஜ் என்கின்ற  மனோஜ்  குமாருக்கு ஆயுள் தண்டனையும்,  ஆயிரம்  ரூபாய்  அபராதமும்  விதித்து  தீர்ப்பளித்தார்.

9ம் வகுப்பு மாணவி காதலிக்க மறுத்ததால் காதலிக்க மறுப்பு தெரிவித்த மாணவியை கத்தியால் குத்தியும், தானும் தற்கொலைக்கு முயன்ற இந்த சம்பவத்தின் தீர்ப்பு நீண்ட நாட்களுக்கு பின்னர் இன்று விசாரணைக்கு வந்து தீர்ப்பு அளிக்கப்பட்டது. இதையடுத்து இந்த தீர்ப்பு பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.