செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 25 பிப்ரவரி 2019 (09:56 IST)

காதலிக்க மறுத்த பெண் ஊழியர்..கத்தியால் குத்திய மேலாளர்...

சென்னை அரும்பாக்கம் ரானி அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்தவர்  சரண்யா(24). இவர் கீழ்பாக்கத்தில் உள்ள அழகு நிலையத்தில் ஊழியராக வேலை செய்து வந்தார். அதே அழகு நிலையத்தில் மேலாளராக இருப்பவர் விக்டர் (41) என்பவர் சரண்யா மீது ஆசை வைத்தார்.

சரண்யாவுக்கு ஏற்கனவே திருமணமாகி ஒரு குழந்தை உள்ளது. விக்டருக்கும் திருமணமாகி மனைவி, குழந்தை உள்ளது.ஆனால் அவர்களைப் பிரிந்துதான் தற்போது விக்டர் வாழ்ந்து வருகிறார் என்று தெரிகிறது.
 
இந்நிலையில் விக்டரின் காதாலை ஏற்க சரண்யா மறுத்துவிட்டார்.இருந்தாலும் தொடர்ந்து அவருக்கு விக்டர் தொல்லைகொடுத்து வந்துள்ளார். 
 
இந்நிலையில் நேற்று முன்தினம் பகலில் அழகு நிலையத்தில் அவர் வேலை பார்த்துக் கொண்டிருந்த போது, அவரிடம் வந்த விக்டர் தன் காதலை சரண்யாவிடம் தெரிவித்துள்ளார். சரண்யா கோபமாக விக்டரிடம் பேசியதாக தெரிகிறது. அப்போது விக்டர் தன் கையில் மறைத்து வைத்திருந்த கத்தியால்  சரண்யாவை சரமாரியாக குத்திவிட்டு  அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். 
 
அதன்பின்னர், பலத்த காயம் அடைந்த சரண்யா கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். தற்போது விகடரை கைது செய்த போலீஸார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றன.