எடப்பாடியை மட்டம் தட்ட தொடங்கும் தம்பிதுரை: பின்னணி என்ன?

எடப்பாடியை மட்டம் தட்ட தொடங்கும் தம்பிதுரை: பின்னணி என்ன?


Caston| Last Modified திங்கள், 3 ஏப்ரல் 2017 (16:12 IST)
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை மட்டம் தட்டுவது போல் அதிமுக எம்பி தம்பிதுரை இன்று டெல்லியில் பேசியது அதிமுக வட்டாரத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

 
 
டெல்லியில் போராட்டம் நடத்தும் விவசாயிகளை சந்திக்க சென்ற தமிபிதுரையிடம் நிரூபர்கள் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஏன் விவசாயிகளை சந்திக்க வரவில்லை என நிரூபர்கள் கேள்வி எழுப்பினர்.
 
இதற்கு பதில் அளித்த தம்பிதுரை தன்னுடைய பதவி ஒன்றும் குறைவான பதவியில்லை. மக்களவை துணை சபாநாயகராக நான் இருக்கிறேன். இது முதல்வர் பதவிக்கு சமமான பதவி என்றார். எடப்பாடி பழனிச்சாமியின் பதவி குறித்து தம்பிதுரை கூறிய கருத்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை மட்டம் தட்டுவதாக உள்ளதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.
 
மேலும் ஓபிஎஸ் முதல்வராக இருக்கும் போதும் இப்படித்தான் தம்பிதுரை அவருக்கு எதிராக பேசி சசிகலாவை முதல்வராக்க வேண்டும் என கூறி வந்தார். இந்நிலையில் எடப்பாடி பழனிச்சாமி பற்றி தம்பிதுரை பேசியிருப்பது, மீண்டும் தினகரனை முதல்வராக்க இப்படி பேசியிருக்கிறாரா என அதிமுக வட்டாரத்தில் விவாதிக்கிறார்கள். சசிகலாவோ, தினகரனோ முதல்வராக இருந்தால் தம்பிதுரை இப்படி ஒரு கருத்தை கூறியிருப்பாரா என்பது தான் முக்கிய கேள்வியாக இருக்கிறது.


இதில் மேலும் படிக்கவும் :