1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Dinesh
Last Modified: புதன், 10 ஆகஸ்ட் 2016 (06:02 IST)

மாணவர் முதுகில் அமர்ந்து பாடம் நடத்திய ஆசிரியர்

மாணவர் முதுகில் அமர்ந்து பாடம் நடத்திய ஆசிரியர்

அன்னூர் அருகே கெம்பநாயக்கன்பாளையத்தை சேர்ந்தவர் சந்தோஷ்குமார், பரிமளா தம்பதியரின் மகன் பிரவீன் (13)  கெம்பநாயக்கன்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வருகிறான்.


 


பிரவீன் வகுப்பில் சக மாணவர்களுடன் தகராறில் ஈடுபட்டதற்காக தமிழ் ஆசிரியர் மாரப்பன் (36), குனிந்து நிற்க சொல்லி அவர் மீது அமர்ந்து கொண்டு பாடம் நடத்தியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து மாணவன் பெற்றோருக்கு தெரிவிக்கவே, பிரவீனின் தாய் பரிமளா, கோவை கலெக்டர் ஹரிஹரனிடம் புகார் மனு அளித்தார். இம்மனுவை விசாரிக்கும்படி அன்னூர் தாசில்தாருக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.

இதையடுத்து தாசில்தார் இருதயராஜ், கிராம நிர்வாக அலுவலர் செல்வராஜ் ஆகியோர் பள்ளிக்கு சென்று உதவி தலைமையாசிரியர் கீதா, ஆசிரியர் மாரப்பன், மாணவனின் பெற்றோர் மற்றும் மாணவனிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் தமிழாசிரியர் மாணவன் முதுகில் மீது அமர்ந்து கொண்டு பாடம் நடத்தியது உறுதி செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து, இதுபோன்ற தவறு இனிமேல் நடக்காது என ஆசிரியர் உறுதி அளித்ததால், அவர் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.