ஞாயிறு, 17 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Abimukatheesh
Last Updated : திங்கள், 9 மே 2016 (19:24 IST)

மது விற்பனை 37 சதவிதம் உயர்வு: தேர்தல் அதிகாரிகள் விசாரணை

டாஸ்மாக் கடைகளில் மது விற்பனை 37 சதவிதம் உயர்ந்துள்ளது. இதுபற்றி தேர்தல் பார்வையாளர்கள் விசாரணை நடத்த தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி  உத்தரவிட்டுள்ளார்.
 




























கோடை வெயிலை முன்னிட்டு டாஸ்மாக்கில் பீர் விற்பனை அதிகரித்தைத் தொடர்ந்து, தற்போது மது விற்பனை 37 சதவிதம் அதிகரித்துள்ளது. 
 
இது குறித்து ராஜேஷ் லக்கானி கூறியதாவது:-
 
பத்துக்கும் மேற்பட்ட இரு சக்கர வாகனங்களில் சென்று பிரச்சாரம் செய்தால் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும்,
 
மே 14ஆம் தேதி மாலை ஆறு மணிக்குள் அரசிகள் கட்சிகள் அனைத்தும் தங்கள் பிரச்சாரத்தை முடித்துக் கொள்ள வேணடும்,
 
டாஸ்மாக் கடைகளில் மது விற்பனை 37 சதவிதம் அதிகரித்து குறித்து தேர்தல் பார்வையாளர்கள் விசாரணை தகவல் அளிக்க உத்தரவிட்டுள்ளேன், என்றார்
 
மேலும், தேர்தல் குறித்து தமிழக தலைமை செயலாளர், உள்துறை செயலாளர், காவல்துறை தலைவர், வருமானவரித்துறை ஆணையர் உள்ளிட்டோருடன் தலைமை தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதி, வீடியோ கான்பிரன்சிங் மூலம் ஆலோசனை நடத்த உள்ளதாகவும் லக்கானி தெரிவித்தார்.