1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Modified: சனி, 18 ஜூன் 2016 (15:17 IST)

தமிழகத்தில் எப்போது வெப்பம் குறையும் தெரியுமா?

மேகங்கள் ஒன்று சேர்ந்து மழை பெய்யும் வாய்ப்பு இருப்பதால், இந்த மாதம் 23ஆம் தேதிக்கு பின் வெப்பம் தணியும் என்றும், அதுவரை வெப்பம் இருக்கும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.


 

 
இது குறித்து வானிலை மைய அதிகாரிகள் கூறியதாவது:
 
கோடை வெயில் முடிவடைந்ததால், இந்த மாதம் தொடக்கத்தில் இருந்து வெயிலின் தாக்கம் குறையும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கடல் காற்று இல்லாததால் தொடர்ந்து வெயிலின் தாக்கம் நீடித்து வந்தது. அவ்வப்போது ஈரப்பதம் நிரம்பிய காற்று வீசுவதால், இரவு நேரங்களில் வெப்பம் தணிந்து காணப்படுகிறது.
 
இந்நிலையில், வானில் மேகக் கூட்டங்கள், ஒன்று கூடி தமிழகத்தை நோக்கி வந்து கொண்டிருக்கிறது. அப்படி அந்த மேகங்கள் ஒன்று கூடும் பட்சத்தில் வருகிற 23ஆம் தேதிக்கு பின் சென்னை உட்பட தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. எனவே வெயில் தாக்கம் குறைந்துவிடும். அதுவரை இப்போது இருப்பதுபோல் தொடர்ந்து வெப்பம் நீடிக்கும் ” என்று கூறினார்கள்.