1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 5 ஏப்ரல் 2021 (10:19 IST)

தேர்தல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்; 3.50 லட்சம் பேர் பயணம்!

தமிழக சட்டமன்ற தேர்தலில் மக்கள் வாக்களிக்க சொந்த ஊருக்கு செல்ல சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்ட நிலையில் இதுவரை 3.50 லட்சம் பேர் பயணித்துள்ளனர்.

தமிழகத்தில் நாளை சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் பணிகளை தேர்தல் ஆணையம் தீவிரமாக மேற்கொண்டுள்ள நிலையில் தேர்தலில் மக்கள் வாக்களிப்பதன் விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகிறது.

இந்நிலையில் தேர்தலில் வாக்களிக்க மக்கள் வெளியூரிலிருந்து சொந்த ஊருக்கு செல்ல ஏப்ரல் 1 முதலாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் இன்று வரை 5 நாட்களில் சென்னை மற்றும் பல பகுதிகளிலிருந்து தினசரி மற்றும் சிறப்பு பேருந்துகள் என மொத்தமாக 14,215 பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளன.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்ட நிலையில் இதுவரை 3.50 லட்சம் பேர் இந்த பேருந்துகளில் பயணித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வாக்களிக்க வந்தவர்கள் மீண்டும் ஊர்களுக்கு செல்ல 7 மற்றும் 8ம் தேதிகளில் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.