திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sivalingam
Last Modified: செவ்வாய், 9 மே 2017 (23:30 IST)

அண்ணன் மறுபடியும் வருவார்! பல அதிரடிகளை தருவார்: அழகிரி ஆதரவாளர்கள் கர்ஜனை

திமுக தலைவர் மு.கருணாநிதி உடல்நலமில்லாமல் கடந்த சில மாதங்களாக இருப்பதால் கட்சியின் முழு பொறுப்பை மு.க.ஸ்டாலின் அவர்களே கவனித்து வருகிறார். இந்த நிலையில் ’கருணாநிதி உடல்நலக்குறைவால் உள்ளதால், பொறுமை காத்து வருகிறோம். எங்கள் அண்ணன் தேவையான நேரத்தில் களத்திற்கு வருவார். அவரது அரசியல் பல அதிரடிகளை கொண்டதாக இருக்கும் என்று மு.க.அழகிரியின் ஆதரவாளர்கள் திமுகவினர் முன்னரே கர்ஜித்து வருகின்றனர். எனவே திமுகவில் கூடிய விரைவில் ஒரு வாரிசு சண்டை ஏற்படால் என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.



 


மதுரை மண்ணின் அசைக்க முடியாத அரசியல் சக்தியாகக் கருதப்படும் அழகிரி, ஸ்டாலினுக்கு எதிராக அதிரடியாக களமிறங்கி திமுகவை கைப்பற்றும் முயற்சியில் ஈடுபடுவாரா? அல்லது வேறு கட்சியில் சேருவாரா? அல்லது தனிக்கட்சி ஆரம்பிப்பாரா? என்பதே இப்போதைய கேள்வியாக உள்ளது.

இருப்பினும் அழகிரியின் முதல் சாய்ஸ் திமுகதான் என்றும் முடிந்தவரை திமுகவில் ஸ்டாலினை ஒதுக்கி வைத்து கட்சியை கைப்பற்றவே அவர் அதிகபட்சம் முயற்சி செய்வார் என்றும் கூறப்படுகிறது.