வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: ஞாயிறு, 29 செப்டம்பர் 2019 (13:16 IST)

தமிழக பொதுத்துறை ஊழியர்களுக்கு 10 சதவீத போனஸ் – அரசாணை வெளியீடு !

தமிழக மாநில பொதுத்துறை அலுவலங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கான போனஸாக 10 சதவீதம் அளிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு தகுதியான ஊழியர்களுக்கு தீபாவளியை முன்னிட்டு 10 சதவீதம் போனஸ் வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதுகுறித்து வெளியான அரசாணையில் ’ தமிழகத்தில் பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு கடந்த ஆண்டு ஊதிய உயர்வு அளிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் குரூப் ‘சி’ மற்றும் ‘டி’ பிரிவு ஊழியர்களுக்கு 8.33 சதவீதம் போனஸ் மற்றும் 1.67 சதவீதம் ஊக்கத் தொகை என 10% போனஸ் வழங்கப்படும்.’ என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த போனஸுக்கான உச்சவரம்பு 21,000 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.