தமிழ்நாடு சட்டப்பேரவை ஒத்திவைப்பு..! – சபாநாயகர் அப்பாவு!
தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடர் தொடங்கி நடந்து வந்த நிலையில் இன்றுடன் சட்டமன்ற பேரவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.
தமிழ்நாடு ஆண்டு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட பின் தமிழ்நாடு சட்டமன்ற கூட்டம் தொடங்கி மானிய கோரிக்கை மீதான விவாதங்கள், மசோதாக்கள் குறித்து விவாதிக்கப்பட்டு வந்தது.
கடந்த ஏப்ரல் 6 தேதி தொடங்கிய சட்டமன்ற கூட்டத்தொடர் 22 நாட்களாய் தொடர்ந்து நடந்துள்ளது. இந்த 22 நாட்களில் 22 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இதுதவிர பல்வேறு துறைகளுக்கான மானிய கோரிக்கை விவாதங்களும் நடைபெற்றன.
இந்நிலையில் விவாதங்கள் முடிவடைந்த நிலையில் தமிழ்நாடு சட்டமன்ற பேரவையை தேதி குறிப்பிட்டாமல் ஒத்திவைப்பதாக சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார்.