திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 11 ஏப்ரல் 2018 (11:08 IST)

ரஜினியின் எதிர்ப்பு சரியானதே: தமிழிசை

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது டுவிட்டரில் நேற்றைய போராட்டத்தின்போது சீருடை அணிந்த காவல்துறை அதிகாரிகள் தாக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்திருந்தார் என்பதை சற்றுமுன் பார்த்தோம்.
 
இந்த நிலையில் ரஜினியின் இந்த கருத்துக்கு அரசியல் தலைவர்கள் பாராட்டி வருகின்றனர். சற்றுமுன் செய்தி தொலைக்காட்சிகளுக்கு பேட்டியளித்த அமைச்சர் ஜெயகுமார், ரஜினியின் கருத்தை வரவேற்றுள்ள நிலையில் தற்போது தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்திரராஜன், ரஜினியின் டுவீட்டுக்கு தனது டுவிட்டரில் ஆதரவு தெரிவித்துள்ளார்.
 
தமிழிசை செளந்திரராஜன் தனது டுவிட்டரில் இதுகுறித்து கூறியபோது, பொதுமக்களை பாதிக்கும் அளவிற்கும், சட்ட ஒழுங்கை பாதிக்கும் அளவிற்கும், நடந்து கொள்ளும் வன்முறையாளர்களை ரஜினி எதிர்த்திருப்பது சரியானதே என்று அவர் கூறியுள்ளார். '
 
தமிழிசையின் இந்த டுவீட்டுக்கு ரஜினி ரசிகர்கள் ஆதரவும், ஒருசிலர் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர்.