தேமுதிக அழைப்பை பரிசீலிப்போம்: தமிழிசை


Bala| Last Modified வெள்ளி, 11 மார்ச் 2016 (11:35 IST)
வருகிற சட்டப்பேரவை தேர்தலில் தேமுதிக தனித்துப் போட்டியிடும் என்று அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் நேற்று தெரிவித்தார். இதன்மூல நீண்ட நாட்களாக நீடித்துவந்த தேர்தல் கூட்டணி குழப்பம் முடிவுக்கு வந்தது. அதேவேலை தேமுதிக தலைமையில் சேர பிறக்கட்சிகள் எங்களுடன் சேரலாம் என்று பிரேமலதா கூறினார்.

 

இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில் பேசிய பாஜக மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கூறியபோது, ஒத்த கருத்துடைய கட்சிகள் வந்து பேசலாம் என்ற பிரேமலதாவின் அழைப்பை பரிசீலிப்போம் என்றும் தேமுதிகவுடன் இணைந்து செயல்படக் கூடிய வாய்ப்பு கிடைத்தால், அது குறித்து ஆய்வு செய்து முடிவை அறிவிப்போம் என்றும் தெரிவித்தார்.


இதில் மேலும் படிக்கவும் :