1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 16 பிப்ரவரி 2022 (13:22 IST)

பிப்.18 முதல் டெல்டா மாவட்டங்களில் மீண்டும் மழை!

பிப்.18 முதல் டெல்டா மாவட்டங்களில் மீண்டும் மழை பெய்ய வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தகவல். 

 
தமிழகத்தின் கிழக்கு திசை காற்றின் வேகம் மாறுபாடு காரணமாக அடுத்த 3 நாட்களுக்கு மிதமான மழை பெய்யும் என்றும் பிப்ரவரி 15 ஆம் தேதிக்கு மேல் தமிழகம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் மழை பெய்யும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. 
 
அதன்படி இன்று கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான, மிதமான மழை பெய்யக் கூடும். ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
மேலும் நாளை (17-ந்தேதி) தென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான, மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. 
 
அதோடு பிப்.18 முதல் டெல்டா மாவட்டங்களில் மீண்டும் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது. 5 நாட்களுக்கு தமிழகத்தில் மிதமான மழை தொடரும் என வானிலை மையம் கணித்துள்ளது.