திங்கள், 30 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 3 டிசம்பர் 2024 (11:00 IST)

புயல் பாதிப்பு: முதல்வர் ஸ்டாலினிடம் விவரங்கள் கேட்டறிந்த பிரதமர் மோடி..!

Stalin Meet Modi
ஃபெஞ்சால் புயல் பாதிப்புகளை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களை தொடர்பு கொண்டு பிரதமர் மோடி கேட்டறிந்தார் என தகவல் வெளியாகியுள்ளன.
 
வங்க கடலில் உருவான ஃபெஞ்சால் புயல் கடந்த சனிக்கிழமை புதுவை அருகே கரையை கடந்த நிலையில், இதனால் தமிழகத்தில் உள்ள பல மாவட்டங்களுக்கு கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது.
 
இந்த நிலையில், நேற்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வெள்ள புயல் நிலவரங்களை நேரில் சென்று பார்வையிட்ட நிலையில், வெள்ள பாதிப்புக்கு நிவாரணம் வழங்க கோரி பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
 
இடைக்கால நிவாரண நிதியாக ரூ.2,475 கோடி தேவைப்படுகிறது என்று அவர் தனது கடிதத்தில் குறிப்பிட்டு இருந்த நிலையில், சற்றுமுன் முதல்வர் ஸ்டாலின் அவர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்ட பிரதமர் மோடி, வெள்ள பாதிப்புகள் மற்றும் நிவாரண பணிகள் குறித்து கேட்டார்.
 
தமிழக அரசுக்கு தேவையான அனைத்து உதவிகள் மற்றும் ஆதரவை மத்திய அரசு வழங்கும் என்று இந்த உரையாடலில் பிரதமர் மோடி, தமிழக முதல்வரிடம் உறுதி அளித்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
 
 
Edited by Mahendran