வியாழன், 16 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By K.N.Vadivel
Last Updated : வியாழன், 16 ஜூன் 2016 (17:04 IST)

ரஜினியிடம் "மண்டியிட்ட" செய்தி தளம்

ரஜினியிடம் "மண்டியிட்ட" செய்தி தளம்

சூப்பர் ஸ்டார் ரஜினி குறித்து வதந்தியை பரப்பிய செய்தி தளம் அவரிடம் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரியுள்ளது.
 

 
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 2.0 படத்திற்காக அமெரிக்கா சென்றார். உடனே திரும்பி வருவார் என பலரும் எதிர்பார்த்த நிலையில், சில சூழ்நிலை காரணமாக வரவில்லை.
 
இந்த நிலையில் ரஜினிகாந்த் அங்கு மரணம் அடைந்துவிட்டதாக இலங்கையைச் சேர்ந்த ஒரு செய்தி தளம் தகவல் வெளியிட்டது. இதற்கு தமிழ் திரையுலகம், ஹாலிவுட், டோலிவுட் தரப்பினர், ரசிகர்கள் என பலரும் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
 
இதனையடுத்து, தனது தவறை உணர்ந்த சுடர் எப்எம் என்ற அந்த செய்தி தளம் சூப்பர் ஸ்டார் ரஜினியிடம் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரியுள்ளது.