செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj
Last Updated : வியாழன், 4 ஜூன் 2020 (17:53 IST)

மாணவர்களுக்கு வீடு தேடி ஹால்டிக்கெட் வரும் – மாவட்ட ஆட்சியர்

இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 2,16,919 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பலியானவர்கள் எண்ணிக்கை 6,075 ஆக உயர்ந்துள்ளது. அதேசமயம் கொரோனா பாதிப்புடன் அனுமதிக்கப்பட்டு குணமடைந்தோர் எண்ணிக்கை 1,04,107 ஆக உயர்ந்துள்ளது.  தமிழகத்தில் 25,872  பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு கட்டாயம் நடக்குமென அரசு அறிவித்துள்ளது.

இந்நிலையில், சென்னையில் நோய்க்கட்டுப்பாட்ட்ய் பகுதியிலிருக்கும் பொதுத்தேர்வு மாணவர்களுக்கு ஹால் டிக்கெட் வீடு தேடு வரும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

மேலும், வெளியூரில் இருந்துவிட்டு தனிமைப்படுத்துதலில் உள்ள மாணவர்களுக்கும் ஹால் டிக்கெட் வீடுதேடி வரும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.