திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 23 ஆகஸ்ட் 2022 (12:50 IST)

கல்லூரி விடுதியில் மாணவர் மர்ம மரணம்: ஸ்ரீபெரும்புதூர் அருகே அதிர்ச்சி சம்பவம்!

dead
ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள கல்லூரி விடுதியில் மாணவர் ஒருவர் மர்மமான முறையில் மரணமடைந்து இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
 
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே கல்லூரி விடுதியில் தங்கி படித்துக் கொண்டிருந்த மாணவர் அலோக்குமார் என்பவர் மர்மமான முறையில் மரணம் அடைந்தது குறித்து காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர் 
 
அவர் பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர் என்றும் ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்ததாகவும் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது 
 
விடுமுறைக்கு சொந்த ஊர் செல்லாமல் அலோக் குமார் விடுதியில் தனியாக தங்கி இருந்ததாகவும் அப்போது அவரது அறையில் இருந்து துர்நாற்றம் வீசுவதை கண்ட மாணவர்கள் போலீசில் புகார் அளித்த நிலையில் போலீசார் விரைந்து வந்து கதவை உடைத்து பார்த்தபோது அழுகிய நிலையில் தூக்கில் தொங்கிய சடலம் ஆக இருந்தது கண்டுபிடிக்கப் பட்டதாக கூறப்படுகிறது
 
இதனை அடுத்து மாணவரின் உடலை மீட்டு காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து செய்து வருகின்றனர்