செவ்வாய், 26 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 11 ஜூலை 2023 (18:35 IST)

ஜிம் தேவையில்லை, படி ஏறி இறங்கினால் போதும்.. ஆரோக்கியம் தேடி வரும்..!

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் இயற்கையாகவே உடற்பயிற்சி செய்யும் வழக்கம் மனிதர்களுக்கு இருந்தது. குறிப்பாக உரலில் மாவாட்டுவது, படிகள் ஏறி இறங்குவது உள்பட அனைத்துமே இயற்கை உடற்பயிற்சியாக இருந்தது
 
ஆனால் தற்போது ஜிம்மில் சென்று செயற்கையாக உடற்பயிற்சி செய்ய வேண்டிய நிலை உள்ளது. இந்த நிலையில் தினமும் படி ஏறி இறங்கினாலே ஒரு நல்ல உடற்பயிற்சி என்று மருத்துவர்கள் தெரிவித்து வருகின்றனர்.
 
பத்து நிமிடம் வாக்கிங் செய்வதற்கு பதிலாக 5 நிமிடம் படி ஏறி இறங்கினால் கலோரிகள் குறைந்து விடும் என்றும் கூறப்படுகிறது. உடம்பை பிட்டாக வைத்திருப்பதற்கு ஜிம் தேவையில்லை என்றும் தினமும் படி ஏறி இறங்குவது சிரமமாக ஒன்றாக இருந்தாலும் அது உடல் நலத்திற்கு நல்லது என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர் 
 
பத்தாயிரம் படிகள் என்பது இலக்காக வைத்துக்கொண்டு ஒவ்வொரு நாளும் கொஞ்சம் கொஞ்சமாக படிகள் ஏறி இறங்கும் வழக்கத்தை அதிகரிக்க வேண்டும் என்றும் படிகள் ஏறி இறங்குவதை வழக்கமாகி கொண்டால் உடம்பில் எந்தவிதமான நோயும் வராது என்று கூறப்படுகிறது. மேலும் படி ஏறி இறங்கும்போது ஆயுட்காலம் அதிகரிக்கும் என்றும் சமீபத்திய ஆய்வுகள் தெரிவித்துள்ளன.
 
Edited by Mahendran