1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : ஞாயிறு, 30 மே 2021 (08:31 IST)

கருணாநிதி பிறந்தநாள்: தொண்டர்களுக்கு ஸ்டாலின் வேண்டுகோள்!

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பிறந்த நாள் ஜூன் மூன்றாம் தேதி கொண்டாடப்பட உள்ளதை அடுத்து திமுக தலைவரும் தமிழக முதல்வருமான முக ஸ்டாலின் அவர்கள் திமுக தொண்டர்களுக்கு வேண்டுகோள் ஒன்றை விடுத்து கடிதம் ஒன்றை எழுதியுள்ளார் 
 
அந்த கடிதத்தில் ’ஊரடங்கு காலம் என்பதால் உள்ளம் நிறைந்த கலைஞரை நாம் இல்லத்திலேயே கொண்டாடுவோம் என்றும், பேரிடர் காலத்தில் மக்களின் உயிரைப் பாதுகாப்பது நம் தலையாய பணி என்றும் தெரிவித்துள்ளார் 
 
மாபெரும் தலைவர் நம்மிடையே இல்லாவிட்டாலும் அவரது இயக்கம் தமிழகத்தை ஆளும் வாய்ப்பு உள்ளது என்றும், கலைஞர் பிறந்தநாளை கோலாகலமாகக் கொண்டாட இயலவில்லையே என்ற ஏக்கம் உடன்பிறப்புகளுக்கு இருக்கும் என்றும், எனினும் கட்டுப்பாடு காத்து அவரவர் இல்லங்களில் கலைஞர் திருவுருவப் படத்திற்கு மரியாதை செலுத்தி கொண்டாடுங்கள் என்றும் முக ஸ்டாலின் அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளார்.