1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: செவ்வாய், 6 ஜூன் 2017 (12:08 IST)

தினகரன் அணிக்கு வர உள்ள செந்தில் பாலாஜி?: எடப்பாடி பழனிச்சாமிக்கு டாட்டா!

தினகரன் அணிக்கு வர உள்ள செந்தில் பாலாஜி?: எடப்பாடி பழனிச்சாமிக்கு டாட்டா!

இரண்டு அணியாக பிளவுபட்டு இருந்த அதிமுக தற்போது தினகரன் ஜாமீனில் வெளிவந்த பின்னர் மூன்றாக பிளவுபட்டுள்ளது. இதனால் ஆளும் அதிமுக ஆட்சிக்கு ஆபத்து வந்துள்ளது. எந்த நேரமும் ஆட்சி கவிழும் என அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.


 
 
இந்நிலையில் முன்னாள் அமைச்சரும் அரவக்குறிச்சி தொகுதி எம்எல்ஏவுமான செந்தில் பாலாஜி தினகரன் அணிக்கு செல்ல இருப்பதாக தகவல்கள் வருகிறது. கடந்த சில வாரங்களுக்கு முன்னர் செந்தில் பாலாஜி சில எம்எல்ஏக்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.
 
செந்தில் பாலாஜி தனக்கு அமைச்சர் பதவி வேண்டும் என தொடர்ந்து எடப்பாடி பழனிச்சாமிக்கு நெருக்கடி கொடுத்து வந்ததாக கூறப்பட்டது. ஆனால் அவருக்கு அமைச்சர் பதவி வழங்காமல் எடப்பாடி பழனிச்சாமி இழுத்தடித்து வந்தார். இந்நிலையில் அதிருப்தி காரணமாக செந்தில் பாலாஜி தினகரன் அணிக்கு செல்ல இருப்பதாக தினகரன் அணி வட்டாரத்தில் பேசப்படுகிறது.
 
செந்தில் பாலாஜி தினகரன் அணியை சேர்ந்த பெரும்பூர் தொகுதி வெற்றிவேலிடம் கடந்த வாரம் பேசியதாகவும் அப்போது அவர் எடப்பாடி பழனிச்சாமி அமைச்சரவை மீது அதிருப்தியில் இருப்பதாகவும், இதனால் தினகரன் அணிக்கு வர தயாராக இருப்பதாகவும் கூறியதாக தகவல்கள் வருகின்றன.
 
தற்போது ஜாமீனில் வெளியே வந்துள்ள தினகரன் தனது ஆதரவு எம்எல்ஏக்களின் பலத்தை அதிகரிக்க அடுத்ததாக முயற்சிகள் செய்ய உள்ளதால், செந்தில் பாலாஜி விரைவில் தினகரனை சந்திப்பார் என அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.