சேலம் சிறுமியை மும்பைக்கு கடத்தி சென்று பலாத்காரம் செய்த வாலிபர் கைது!

சேலம் சிறுமியை மும்பைக்கு கடத்தி சென்று பலாத்காரம் செய்த வாலிபர் கைது!


Caston| Last Modified புதன், 21 ஜூன் 2017 (16:40 IST)
சிறுமியை மும்பைக்கு கடத்தி சென்று பலாத்காரம் செய்தது, சிறுமிக்கு திருமணம் செய்தது உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் சேலத்தை வாலிபர் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்துள்ளனர் போலீசார்.

 
 
சேலம் ஆணையாம்பட்டி கிராமத்தில் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த சுப்ரமணியன் என்பவரது மகன் 20 வயதான பொன்னுமணி. இவருக்கும் அதே ஊரைச் சேர்ந்த 17 வயது மாணவிக்கும் இடையே காதல் ஏற்பட்டுள்ளது. 17 வயதான அந்த மாணவி துறையூரில் தனியார் கல்லூரி ஒன்றில் இயற்பியல் படித்து வந்தார்.
 
இவர்கள் இருவரும் காதலித்து வந்ததால் மாணவியை கடந்த பிப்ரவரி மாதம் 5-ஆம் தேதி திருமணம் செய்வதாக கூறி அந்த வாலிபர் கடத்திச் சென்றார். சேலத்தில் இருந்து மும்பைக்கு மாணவியை அழைத்து சென்ற அந்த வாலிபர் திருமணம் செய்து கொள்ளாமல் மாணவியுடன் உடலுறவு கொண்டுள்ளார்.
 
இதனையடுத்து கடந்த மே 6-ஆம் தேதி சொந்த ஊருக்கு வந்த இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில் கடந்த, 19-ஆம் தேதி மாணவியை கணவர் உட்பட அவரது பெற்றோர்கள் அடித்து துன்புறுத்தி, கழுத்தில் இருந்த தாலியை பறித்துக்கொண்டு வீட்டை விட்டு விரட்டியுள்ளனர்.
 
இதனால் தனது தாய் வீட்டிற்கு சென்ற மாணவி நடந்த சம்பவங்களை கூறியுள்ளார். அதன் பின்னர் மாணவியின் பெற்றோர்கள் நேற்று ஆத்தூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தனர்.
 
இதனையடுத்து மாணவியை சீரழித்த அந்த வாலிபன் அவரது தந்தை, தாய் ஆகியோர் மீது சிறுமிக்கு திருமணம், கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் உள்பட ஆறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து கைது செய்து விசாரித்து வருகின்றனர்.


இதில் மேலும் படிக்கவும் :