சைக்கிள் ஓட்டுவதை கண்டித்ததால் பள்ளி மாணவி தற்கொலை
சைக்கிள் ஓட்டும்போது தவறி விழுந்து காயம்பட்டதால், பெற்றோர்கள் கண்டித்தை அடுத்து, பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
தேனி மாவட்டம், உத்தமபாளையம் காவலர் குடியிருப்பில் வசித்து வருபவர் நாராயண சோனை. இவர் கம்பத்தில் சிறப்பு சார்பு ஆய்வாளராக பணிபுரிந்து வருகிறார். இவரது மகள் சங்கவி (15). அப்பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார்.
இந்நிலையில், திங்களன்று விடுமுறை என்பதால் வீட்டில் இருந்த சைக்கிளை எடுத்து ஓட்டிச் சென்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக சைக்கிளில் இருந்து தவறி கீழே விழுந்துள்ளார். இதனால், அந்த மாணவிக்கு காயம் ஏற்பட்டுள்ளது.
இதனால், மாணவியை அவரது பெற்றோர்கள் கண்டித்துள்ளனர். இதனால் மனமுடைந்த சங்கவி வீட்டிலேயே தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து உத்தமபாளையம் காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.