1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: திங்கள், 23 ஜனவரி 2017 (16:59 IST)

சசிகலா அதிகாரத்தை கையிலெடுக்க வேண்டும்: சுப்பிரமணியன் சுவாமி வேண்டுகோள்!

சசிகலா அதிகாரத்தை கையிலெடுக்க வேண்டும்: சுப்பிரமணியன் சுவாமி வேண்டுகோள்!

தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்காக மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள் என பலரும் நிரந்தர தீர்வுக்காக தொடர் போராட்டங்களை நடத்தி வந்தனர். அவர்களை போலீசார், சமாதான பேச்சுவார்த்தை நடத்தியும், தடியடி நடத்தியும் கலைத்தனர்.


 
 
இந்த சூழ்நிலையில் சசிகலா அதிகாரத்தை கையிலெடுக்க வேண்டும் என பாஜக மூத்த தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான சுப்பிரமணியன் சுவாமி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.
 
இது குறித்து அவர் பதிவிட்டுள்ள டுவிட்டர் பதிவில், சசிகலா கண்டிப்பாக அதிகாரத்தை கையிலெடுக்க வேண்டும். நக்சல்களின் வலது கையான நடராஜனை அதிகாரத்திலிருந்து துரத்தவேண்டும். பன்னீர்செல்வம் சிறந்த மனிதர் தான் ஆனால் நல்ல எண்ணங்களுடன் பயணிப்பது நகரத்திற்கு செல்லும் வழியாகும் என கூறியுள்ளார்.

 
சசிகலாவுக்கு ஆதரவாக சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ள இந்த கருத்துக்கு பலரும் எதிர்மறையான கருத்துக்களை அவரது டுவிட்டில் பதிவு செய்து வருகின்றனர்.