வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Updated : செவ்வாய், 20 டிசம்பர் 2016 (12:00 IST)

முதல்வராக பதவியேற்க இருக்கும் சசிகலா: எப்போது தெரியுமா?

முதல்வராக பதவியேற்க இருக்கும் சசிகலா: எப்போது தெரியுமா?

தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா கடந்த 5-ஆம் தேதி சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் காலமானார். அவர் மரணமடைந்ததை அடுத்து உடனடியாக புதிய முதலமைச்சராக ஓ.பன்னீர் செல்வமும் புதிய அமைச்சரவையும் பதவியேற்றது.


 
 
இதனையடுத்து ஜெயலலிதா வகித்து வந்த அதிமுக தலைமை பதவியான பொதுச்செயலாளர் பதவியை வகிக்க போவது யார் என்ற விவாதம் நடந்து வருகிறது. இந்நிலையில் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பலரும் சசிகலா தான் அடுத்த பொதுச்செயலாளர் என கூறி வருகின்றனர். அவரை சந்தித்து பொதுச்செயலாளர் பதவியை ஏற்று கட்சியை வழி நடத்தி செல்ல வேண்டும் என கோரிக்கைவிடுத்து வருகின்றனர்.
 
ஆனால் தற்போது ஒருபடி மேலே சென்று, சசிகலா முதல்வராக பதவியேற்க வேண்டும் என கூறி வருகின்றனர். தமிழக முதல்வராகவும் சின்னம்மா சசிகலா பதவி ஏற்க வேண்டும் என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறி வருகிறார். சிகலா வருகிற தைப் பொங்கலுக்குப் பிறகு அவர் பதவியேற்கலாம் எனத் தெரிய வருகிறது.
 
சசிகலா முதலமைச்சராக வேண்டும் என செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் உதயகுமார், ஜெயலலிதாவுக்கு மிகவும் உறுதுணையாக இருந்தவர் சசிகலா. தியாகத்தின் வடிவமாக அவர் திகழ்ந்து வரும் சசிகலா 1 கோடி தொண்டர்களின் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்குகிறார். அவர் மீது நாங்கள் முழு நம்பிக்கை வைத்துள்ளோம்.
 
சசிகலா காட்டும் வழியில் விசுவாசத்துடன் அரசியல் பயணம் தொடருவோம். அதிமுக பொதுச் செயலாளர் பதவி ஏற்று கட்சியை வழி நடத்துவதுமட்டுமின்றி சசிகலா ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிட்டு மகத்தான வெற்றி பெற்று முதலமைச்சராகவும் ஆக வேண்டும் என அவர் கூறினார்.