Last Updated : வியாழன், 20 அக்டோபர் 2016 (12:37 IST)
ஜெ.வுக்கு சிகிச்சை அளிக்க நிபுணத்துவம் இல்லாத மருத்துவர்களை தேர்ந்தெடுத்த சசிகலா: கசிந்த காரணம்!
ஜெ.வுக்கு சிகிச்சை அளிக்க நிபுணத்துவம் இல்லாத மருத்துவர்களை தேர்ந்தெடுத்த சசிகலா: கசிந்த காரணம்!
தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல் நலக்குறைவால் கடந்த 4 வார காலமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். படுக்கையிலேயே இருந்து வருவதால் அவரை புத்துணர்ச்சியுடன் வைக்க பேசிவ் பிசியோ தெரபி அளிக்கப்பட்டு வருகிறது.
சிங்கப்பூர் குயின் எலிசெபெத் மருத்துவமனையின் சீனியர் பிசியோதெரப்பிஸ்டுகளாக பணி புரியும் சீமா மற்றும் மேரி ஆகிய இருவரும் முதல்வர் ஜெயலலிதாவுக்கு பேசிவ் பிசியோ தெரபி சிகிச்சை அளித்து வருகின்றனர். இவர்கள் இருவரும் பிசியோ தெரபியில் பெரிய நிபுணர்த்துவம் பெற்றவர்கள் இல்லையாம், இவர்களை விட சிறந்த பிசியோ தெரபி மருத்துவர்கள் இந்தியாவிலேயே இருப்பதாக தகவல்கள் வருகின்றன.
பிறகு ஏன் சசிகலாவும், அப்பல்லோ நிர்வாகமும் இந்திய பிசியோ தெரபி மருத்துவர்களை அனுகாமல், சிங்கப்பூர் பிசியோ தெரபி மருத்துவர்களை அனுகினார்கள் என்றால், சிங்கப்பூர் நாட்டின் சட்டப்படி எந்த நோயாளிக்கு சிகிச்சை அளிக்கிறோமோ, அவர்களைப் பற்றிய தகவலை யாரிமுடம் பேசக்கூடாது என்ற சட்டம் உள்ளது.
தற்போது சிகிச்சை அளிப்பவர்கள் சிங்கப்பூர் குடியுரிமை பெற்றவர்கள் என்பதால் ஜெயலலிதாவின் உடல்நிலைப்பற்றிய தகவல்கள் வெளியே கசியாமல் இருக்கும். இதனால் தான் இவர்களை சசிகலா தேர்ந்தெடுத்ததாக கூறப்படுகிறது.