1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Updated : வியாழன், 4 மே 2017 (14:12 IST)

சசிகலா தீட்டிய மாஸ்டர் பிளான்: ஜெயலலிதாவின் பணம் நகையை கைப்பற்றிய பின்னணி!

சசிகலா தீட்டிய மாஸ்டர் பிளான்: ஜெயலலிதாவின் பணம் நகையை கைப்பற்றிய பின்னணி!

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது அவரது கோடிக்கணக்கான பணம் மற்றும் ஆபரண நகைகளை கைப்பற்ற அவரது தோழி சசிகலா மாஸ்டர் பிளான் ஒன்றை அரங்கேற்றி அதனை தினகரன் மூலம் கச்சிதமாக முடித்ததாக தகவல்கள் வருகின்றன.


 
 
ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வீட்டில் ரகசிய பாதாள அறை ஒன்று இருப்பதாக கூறப்படுகிறது. ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்த போது போயஸ் கார்டன் ரகசிய அறையில் ரொக்கமாக 25000 கோடி ரூபாய் இருந்ததாக கூறப்படுகிறது.
 
அப்போது போயஸ் கார்டன் சசிகலா கட்டுப்பாட்டில் இருந்தாலும், பணம் இருக்கும் ரகசிய அறையில் சசிகலாவால் நுழைய முடியவில்லை. காரணம் அந்த பாதாள அறையின் லாக்கர் ஜெயலலிதாவின் கால் விரல் ரேகைகள் மூலம் பயோமெட்ரிக் முறையில் லாக் செய்யப்பட்டிருந்தது.
 
இதனை திறக்க வேண்டுமானால் ஜெயலலிதாவின் கால் ரேகைகள் தேவை. அதானல் ஜெயலலிதாவின் கால்களை எடுக்க சசிகலா உத்தரவிட்ட அதிர்ச்சி தகவல்கள் வருகின்றன. பணம் மற்றும் ஆபரண நகைகளை உடனடியாக நாடுகடத்த திட்டமிட்ட சசிகலா தினகரனை வைத்து ஒரு மாஸ்டர் பிளானை அரங்கேற்றினார்.
 
ரகசிய அறையில் இருந்த அத்தனையும் கண்டெய்னர்கள் மூலம் கடல் வழியாக வெளிநாடுகளுக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும், இதற்கு மூளையாக செயல்பட்டது தினகரன் தான் எனவும் பரபரப்பாக பேசப்படுகிறது.