1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: ஞாயிறு, 15 ஜனவரி 2017 (13:12 IST)

தப்புமா சசிகலாவின் பொதுச்செயலாளர் பதவி?: சசிகலா புஷ்பா அடுத்த மூவ்!

தப்புமா சசிகலாவின் பொதுச்செயலாளர் பதவி?: சசிகலா புஷ்பா அடுத்த மூவ்!

ஜெயலலிதாவின் மறைவை அடுத்து அதிமுகவின் பொதுச்செயலாளராக சசிகலா நடராஜன் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால் இது கட்சியின் அடிப்படை விதிமுறைகளுக்கு மாறாக தேர்ந்தெடுக்கப்பட்டதாகவும்.


 
 
இந்நிலையில் ஆரம்பம் முதலே சசிகலாவுக்கு எதிராக பேசி வரும் சசிகலா புஷ்பா இந்திய தேர்தல் ஆணையத்தை நாடியுள்ளார். சசிகலா அதிமுக பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டதை இந்திய தேர்தல் ஆணையம் ஏற்க கூடாது என சசிகலா புஷ்பா கடிதம் அனுப்பியுள்ளார்.
 
இது குறித்து கூறிய சசிகலா புஷ்பா, ஜெயலலிதா மரணத்தில் இருக்கும் மர்மத்தை சசிகலா தான் விளக்க வேண்டும். ஜெயலலிதாவாலேயே துரோகி என பட்டம் சூட்டப்பட்டு போயஸ் கார்டனை விட்டு வெளியேற்றப்பட்ட சசிகலா இன்று ஜனநாயகத்தை காலில் போட்டு மிதித்து விட்டு பொதுக் குழுவால் அதிமுகவின் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
 
கட்சியின் அடிப்படையான விதிகள் அனைத்தும் இந்த நியமனத்தில் அப்பட்டமாக மீறப்பட்டுள்ளது. எனவே சசிகலா கட்சியின் பொதுச்செயலாளராக நியமித்ததை தேர்தல் ஆணையம் ஏற்கக் கூடாது. கட்சியின் அடிப்படை விதிகளின்படி கட்சியின் உறுப்பினர்கள் அனைவரும் ஓட்டளித்து புதிய பொதுச்செயலாளரை தேர்ந்தெடுக்க தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்ய வேண்டும் என்றார் சசிகலா புஷ்பா.