புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: திங்கள், 19 செப்டம்பர் 2016 (16:22 IST)

சசிகலா புஷ்பாவுக்கு சடை பின்னும் திருச்சி சிவா: வெளியானது புதிய புகைப்படங்கள்!

சசிகலா புஷ்பாவுக்கு சடை பின்னும் திருச்சி சிவா: வெளியானது புதிய புகைப்படங்கள்!

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட மாநிலங்களவை உறுப்பினர் சசிகலா புஷ்பா திமுக மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவாவும் நெருக்கமாக இருக்கும் புதிய புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.


 
 
சசிகலா புஷ்பா ஏற்கனவே திருச்சி சிவாவுடன் இருக்கும் நெருக்கமான புகைப்படங்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அப்போது அது உண்மையான புகைப்படம் இல்லை மார்ஃபிங் செய்யப்பட்டது என சசிகலா புஷ்பா தரப்பில் கூறப்பட்டது.
 
இது நடந்த சில மாதங்கள் கழித்து அதே திருச்சி சிவாவை டெல்லி விமான நிலையத்தில் தாக்கி மீண்டும் சர்ச்சையில் சிக்கினார் சசிகலா புஷ்பா. அதன் பின்ன அதிமுகவில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டார்.


 
 
அதிமுகவில் இருந்து தான் நீக்கப்பட்டாலும், தொடர்ந்து பதவியில் நீடிப்பேன் என கூறி அதிமுகவுக்கு குடைச்சல் கொடுத்து வருகிறார். மேலும் அதிமுக தலைமை மீது நாடாளுமன்றத்திலும், ஊடகங்களிலும் பல பகிரங்க புகார்களை கூறினார்.
 
இந்த சர்ச்சை போய்கொண்டிருந்த போது சசிகலா புஷ்பா, பிலால் என்பவருடன் இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் நேற்று அதிமுகவை சேர்ந்த பிசி சத்தீஸ் என்பவர் சசிகலா புஷ்பா, திருச்சி சிவாவுடன் நெருக்கமாக இருக்கும் புதிய 6 புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
 
திருவல்லிக்கேணி பகுதி எம்.ஜி.ஆர். இளைஞர் அணி பகுதி பொருளாளரான சிந்ததாரிப்பேட்டை பிசி சத்தீஸ் என்பவர் தம்முடைய ஃபேஸ்புக் பக்கத்தில் இந்த 6 புதிய படங்களை வெளியிட்டுள்ளார். சடை பின்னுவது எப்படி புஷ்பா சிவா&கோ என்ற தலைப்பில் அவர் அந்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். மேலும் அதனை சசிகலா புஷ்பாவுக்கும் டேக் செய்துள்ளார்.