1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Abimukatheesh
Last Updated : ஞாயிறு, 12 பிப்ரவரி 2017 (17:06 IST)

பயத்தில் சசிகலா? எம்.எல்.ஏ.க்களுடன் நேரில் சந்திப்பு

இதுவரை எம்.எல்.ஏ.க்கள் தான் தலைமையை தேடிச் சென்று பார்த்து வந்தனர். ஆனால் தொடர்ந்து இரண்டு நாட்களாக அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா கூவத்தூர் நட்சத்திர விடுதியில் உள்ள எம்.எல்.ஏ.க்களை தேடிச் சென்று பார்த்து வருகிறார். 


 

 
முதல்வர் பன்னீர்செல்வம் சசிகலா எதிராக திரும்பும் வரை கட்சியின் தலைமையாக இருந்த சசிகலாவை அனைவரும் தேடிச் சென்று பார்த்து வந்தனர். பன்னீர்செல்வம் சசிகலாவுக்கு திரும்பியதை அடுத்து அதிமுக மூத்த தலைவர்கள் ஓ.பி.எஸ். அணியில் சேர்ந்துள்ளனர். 
 
பொன்னையன் மற்றும் மதுசூதனன் ஆகியோர் ஓ.பி.எஸ். அணியில் இணைந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை ஓ.பி.எஸ்.க்கு 7 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். மேலும் பலர் ஓ.பி.எஸ்.க்கு அதரவு அளிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
 
இந்நிலையில் அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா, கூவத்தூர் நட்சத்திர விடுதியில் தங்கியிருக்கும் அதிமுக எம்.எல்.ஏ.க்களை தொடர்ந்து இரண்டாவது நாளாக தேடிச் சென்று பார்த்து வருகிறார்.
 
இந்த சூழல், சசிகலா பயத்தில் உள்ளதால் எம்.எல்.ஏ.க்களை நேரில் சென்று பார்த்து வருகிறார் என்று கூறப்படுகிறது. அவர்களை வெளியே விட்டால் ஓ.பி.எஸ்.க்கு ஆதரவாக சென்றுவிடுவார்கள் என சசிகலா பயத்தில் உள்ளதாகவும் கூறப்படுகிறது.