அபராதத் தொகை ரூ.30 கோடியை எப்படி கட்டுவது? - விழி பிதுங்கும் சசிகலா குடும்பம்
சொத்துக் குவிப்பு வழக்கில் சிறைத்தண்டனை பெற்றுள்ள சசிகலா, இளவரசி, தினகரன் ஆகியோர் அபாரதத் தொகையை எப்படி கட்டுவது என்பது தெரியாமல் முழித்து வருகிறார்களாம்.
நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் அவர்கள் மூவரும் தலா ரூ.10 கோடியை அபராதமாக செலுத்த வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது. அவர்களிடம் பணத்திற்கு பஞ்சம் இல்லை. ஆனால், எதுவும் முறையாக இல்லை. சசிகலா குடும்பத்தின் தொழில் அனைத்தும் பினாமிகளை வைத்தே நடத்தப்படுகிறது எனத் தெரிகிறது.
அந்நிலையில், மூன்று பேரும் சேர்த்து ரூ.30 கோடியை நீதிமன்றத்தில் செலுத்தினால், உடனடியாக வருமான வரித்துறை வந்து வாசலில் நிற்கும். அந்த பணம் எப்படி வந்தது என்ற கணக்கை கேட்டு கேள்வி எழுப்பும். அவர்களுக்கு முறையான கணக்கை கூற வேண்டி வரும். எனவே, என்ன செய்வது, எப்படி அந்த அபராதத் தொகையை செலுத்துவது என்று சசிகலா, அவரின் கணவர் நடராஜன், தினகரன் ஆகியோர் தங்கள் வழக்கிறிஞர்கள் மற்றும் ஆடிட்டர்களிடம் ஆலோசனை செய்து வருவதாக தெரிகிறது.
அபாரதத் தொகையை கட்டினால் வருமானத் துறை, கட்டாவிடில் மேலும் ஒரு ஆண்டு சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும். என்ன செய்வதென்று முழி பிதுங்கியுள்ளதாம் சசிகலா வட்டாரம்.