ஆட்சியை கைப்பற்ற சசிகலா சதி திட்டம்: சொல்வது யார் தெரியுமா?
ஆட்சியை கைப்பற்ற சசிகலா சதி திட்டம்: சொல்வது யார் தெரியுமா?
தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த மாதம் 22-ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் இன்னமும் வீடு திரும்பவில்லை.
அவரது உடல்நிலை குறித்து பல்வேறு முரண்பாடான தகவல்கள் வருகின்றன. இந்நிலையில் தமிழகத்தின் அடுத்த முதல்வர் யார் என்ற விவாதங்களும் நடக்கின்றன. முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் இருப்பதால் தற்போது தமிழகத்தில் ஆட்சியை கைப்பற்ற அவரது தோழி சசிகலா முயல்வதாக அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட மாநிலங்களவை உறுப்பினர் சசிகலா புஷ்பா கூறியுள்ளார்.
டெல்லியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த சசிகலா புஷ்பா, 2001 ஆம் ஆண்டில் வெளியேற்றப்பட்ட சசிகலா தற்போது ஆட்சியை கைப்பற்ற மீண்டும் சதி திட்டம் தீட்டுகிறார் என பகிரங்க குற்றச்சாட்டை வைத்தார்.
மேலும், முதலமைச்சர் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் இருக்கும் போது அரசு அதிகாரிகளை இயக்குவது யார்? எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.