திங்கள், 6 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Updated : சனி, 29 ஜூலை 2017 (10:35 IST)

சிறையில் அழுது தூக்கமில்லாமல் சசிகலா திணறல்!

சிறையில் அழுது தூக்கமில்லாமல் சசிகலா திணறல்!

சமீபத்தில் இறந்து போன தனது அண்ணி சந்தானலட்சுமியின் உடலுக்கு அஞ்சலி செலுத்த பரோல் கிடைக்காததாலும், மேலும் சிறையில் தனக்கு கிடைத்துவந்த சலுகைகள் ரத்தானதாலும் சசிகலா அழுது தூக்கமில்லாமல் திணறி வருவதாக தகவல்கள் வருகின்றன.


 
 
சசிகலாவின் அண்ணன் மனைவியும், டிடிவி தினகரனின் மாமியாருமான சந்தானலட்சுமி நேற்று முன்தினம் மரணம் அடைந்தார். அவருடைய இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள 5 நாட்கள் பரோல் வழங்குமாறு சசிகலா சார்பில் மனு அளிக்கப்பட்டது.
 
ஆனால் இறந்து போன சந்தானலட்சுமி சசிகலாவுக்கு இறத்த உறவு என்பதால் அந்த மனுவை சிறை அதிகாரிகள் நிராகரித்து விட்டனர். இதனால் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள முடியாத சோகத்தில் ஆழ்ந்தார் சசிகலா.
 
சிறையில் சசிகலா கண்ணீர் விட்டு அழுததால் நீண்ட நேரம் தூக்கம் இல்லாமல் அவர் அவதிப்பட்டதாக தாகவல்கள் வருகின்றன. அதுமட்டுமல்லாமல் சிறையில் சசிகலா லஞ்சம் கொடுத்து சலுகைகள் பெற்றதாக புகார் எழுந்ததை அடுத்து சிறை அதிகாரிகள் இரவு நேரங்களில் சசிகலாவை சரியாக தூங்க விடுவது இல்லை எனவும் அவர் தனது வழக்கறிஞரிடம் கூறியதாக பேசப்படுகிறது.