1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 10 ஏப்ரல் 2018 (14:26 IST)

வெளிநாட்டு அழகிகள் ; கலக்கல் டான்ஸ் : மீண்டும் அண்ணாச்சி - வைரல் வீடியோ

சரவணா ஸ்டோர் உரிமையாளர் சரவணன் அருள் நடித்துள்ள புதிய விளம்பர வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.

 
தனது கடையை விளம்பரப்படுத்த விளம்பர வீடியோக்களில் நடித்து வருகிறார் சரவணன். இதற்கு முன்பு தமனா, ஹன்சிகா ஆகியோரோடு அவர் நடித்த விளம்பர வீடியோக்கள் செம ஹிட்..  சினிமாவில் எப்போது நடிப்பீர்கள்? அவர் அடுத்து நயன்தாராவுடன் நடிக்கிறார்? என தீப்பிடித்தது.
 
சமூக வலைத்தளங்களில் சரவணனை கிண்டலடித்து ஏராளமான மீம்ஸ்கள் வலம் வந்தன. ஆனாலும், மனுஷன் அசரவில்லை. தற்போது புது வீடியோவை இறக்கியுள்ளார். அதில், அவரோடு, வெளிநாட்டு அழகிகள் நடனமாடியுள்ளதுதான் ஹைலைட்..  அழகிகள், குழந்தைகள், ஸ்டைலான நடனம் என சரவணன் அசரடிக்க.. நெட்டிசன்கள் அடுத்த மீம்ஸ்க்கு தயாராகிக் கொண்டிருக்கிறார்கள்...