புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 1 ஏப்ரல் 2020 (19:01 IST)

மத துவேஷம் வேண்டாம்: டெல்லி மாநாடு குறித்து சரத்குமார் கருத்து

சமீபத்தில் நடைபெற்ற டெல்லி மாநாட்டில் கலந்துகொண்டு திரும்பியவர்களால்தான் தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து உள்ளதாக சமூக வலைதளங்களில் ஒரு சிலர் குற்றம் சாட்டி வருகின்றனர். ஆனால் இதனை அந்த மதத்தைச் சார்ந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் நடிகரும், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவருமான சரத்குமார் அவர்கள் இதனை மத தோஷத்துடன் அணுக வேண்டாம் என்றும் நாம் எல்லோரும் ஒற்றுமையாக இருந்து கொரோனாவிற்கு எதிராக போரிட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார் 
 
இதுகுறித்து சரத்குமார் மேலும் கூறியதாவது:டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்களின் மீது மத துவேஷங்களுக்கு இடமளிக்க வேண்டாம். சகோதரத்துவத்துடன் ஒன்றிணைந்து கொரோனாவை எதிர்த்துப் போராட வேண்டிய தருணம் இது. டெல்லி மாநாட்டில் கலந்து கொண்ட அனைவரும் தங்களை பரிசோதனைக்கு உட்படுத்திகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.