1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By K.N.Vadivel
Last Modified: திங்கள், 13 ஜூன் 2016 (08:52 IST)

சாதிக் பாட்ஷா கொலை வழக்கு - சிபிஐ விசாரிக்க அதிமுக கோரிக்கை

சாதிக் பாட்ஷா கொலை வழக்கு - சிபிஐ விசாரிக்க அதிமுக கோரிக்கை

சாதிக் பாட்ஷா கொலை வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என அதிமுக கோரிக்கை விடுத்துள்ளது.
 

 

2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் திமுக  முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா மற்றும் திமுக தலைவர் கருணாநிதியின் மகள் கனிமொழி ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு, பின்பு ஜாமீனில் வெளியே வந்தனர்.
 
இந்த வழக்கில், ஆ.ராசாவின் நண்பர்ரு சாதிக் பாட்சாவிடம் விசாரணை நடத்த சிபிஐ முயன்றது. இந்த நிலையில், கடந்த 2011ம் ஆண்டு மார்ச் மாதம் சென்னையில் அவரது வீட்டில்த சாதிக் பாட்சா படுகொலை செய்யப்பட்டார்.
 
இந்த நிலையில்,  திமுக முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசாவின் நண்பர் சாதிக்பாட்சா மரணம் குறித்த வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டும் என்று அதிமுக கோரிக்கை விடுத்துள்ளது.
 
குறிப்பாக, இந்த வழக்கில் சிபிஐ விசாரணை தேவை என சென்னை போலீஸ் கமிஷினரிடம் அதிமுக வழக்கறிஞர்கள் மனு அளித்துள்ளனர்.
 
தற்போது, மத்தியில் உள்ள பாஜகவும், மாநிலத்தில் உள்ள அதிமுகவும் நல்ல நெருக்கத்தில் உள்ளது. மேலும், ஜெயலலிதா நாளை டெல்லி செல்லும் சென்று பிரதமர் மோடியை சந்திக்கும் போது, இந்த கோரிக்கை வலுப்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
இதனால், சிபிஐ விசாரணயை திமுக விரைவில் எதிர்கொள்ள நேரிடும் என்பதே அரசியல் பார்வையாளர்களின் கருத்தாக உள்ளது. இந்த தகவல் அறிந்த திமுக வட்டாரம் கடும் கொதிப்பில் உள்ளது.