1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sivalingam
Last Modified: சனி, 8 ஏப்ரல் 2017 (04:23 IST)

விஜயபாஸ்கர்-சரத்குமார் வீடுகளில் சோதனை: ரூ.89 கோடி சிக்கியதா?

பிரபல நடிகர் சரத்குமார் மற்றும் சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீடுகள் உள்பட நேற்று பல்வேறு இடங்களில் நடந்த வருமான வரித்துறை அதிகாரிகளின் சோதனை தமிழக அரசியல் களத்தை பரபரப்பாக்கி உள்ளது.



 


இந்த நிலையில் அமைச்சர் விஜயபாஸ்கரின் உதவியாளர் நைனார் முகமது வீட்டிலிருந்து 3 கோடியே 50 லட்சம் ரூபாயும்,. மற்றொரு உதவியாளர் கல்பேஷின் கீழ்பாக்கம் வீட்டில் இருந்து 1 கோடி ரூபாயும் கைப்பற்றப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதேபோல் முன்னாள் எம்பி சிட்லபாக்கம் ராஜேந்திரன், நடிகர் சத்குமார் ஆ‌கியோரது வீடுகளில் நடைபெற்ற சோதனையில் முக்கிய ஆவணங்கள் மற்றும் 89 கோடி ரூபாய் அளவு முறைகேடு நடைபெற்றிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மேலும் வாக்காளர் பட்டியல் உட்பட முக்கிய ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றியுள்ள அதிகாரிகள் 86 சதவிகித வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா நடைபெற இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டு நிறுத்தப்பட்டதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.

இந்த சோதனை அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக நடந்ததாக விஜயபாஸ்கர் மற்றும் சரத்குமார் தரப்பில் இருந்து கூறப்பட்டுள்ளது.