வெள்ளி, 8 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : திங்கள், 19 பிப்ரவரி 2024 (11:44 IST)

சாலை இரும்பு தடுப்பு உடைந்து சேதம்..! ஆபத்தான முறையில் பயணிக்கும் வாகன ஓட்டிகள்..! நடவடிக்கை எடுக்கப்படுமா..?

road issue
திருத்தணி அருகே சென்னை- திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் சாலை இரும்பு தடுப்பு உடைந்து உள்ள நிலையில், விபத்து ஏற்படுவதற்கு 100% வாய்ப்புகள் உள்ளதால் ஆபத்தான முறையில் வாகன ஓட்டிகள் பயணித்து வருகின்றனர். இதனை தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் இருப்பதாகவும் வாகன ஓட்டிகள் புகார் தெரிவிக்கின்றனர்.
 
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி தாலுகாவிற்கு உட்பட்ட சென்னை- திருப்பதி தேசிய நெடுஞ்சாலை உள்ளது. இந்த பகுதிகளில் கொசத்தலை ஆறு, மற்றும் அதிக அபாயகரமான மரண பள்ளங்கள் அதிக அளவு உள்ளன.
 
10 வருடங்களுக்கு முன்பு தேசிய நெடுஞ்சாலை இந்த பகுதியில் அமைக்கப்பட்ட போது சாலை தடுப்பு இரும்பு தடுப்புகள் அமைக்கப்பட்டு இருந்தது. தற்போது பல்வேறு சூழ்நிலைகளில் விபத்து மற்றும் பல்வேறு காரணங்களில் சாலை தடுப்புகள் பல இடங்களில் உடைந்து சேதமடைந்துள்ளன
 
உடைந்த சாலை தடுப்புகளை தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள்  பராமரிப்பு செய்யும் நிர்வாகம் யாரும் இதனை கண்டு கொள்ளாமல் சரி செய்யவில்லை.  அதனால் பகல் மற்றும் இரவு வேலைகளில் சாலை தடுப்புகள் இல்லாததால் வாகனங்கள் முந்தி செல்லும் போது விபத்துகள் ஏற்பட்டால் அதிக உயிர் சேதம் ஏற்படும் என்று வாகன ஓட்டிகள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

 
உடனடியாக தேசிய நெடுஞ்சாலையில் சாலை தடுப்புகளை சரி செய்து சாலைகளில் அதிகளவு பள்ளங்கள் உள்ள பகுதிகளை பராமரிப்பு செய்யவும் தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுக்கு திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட வேண்டும் என்று வாகன ஓட்டிகளும் மற்றும் பொதுமக்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.