1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Suresh
Last Updated : சனி, 27 ஜூன் 2015 (09:51 IST)

ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல்: நீண்ட வரிசையில் நின்று வாக்காளர்கள் வாக்களிப்பு

சென்னை ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப் பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. இதைத் தொடர்ந்து வாக்காளர்கள் நீண்ட  வரிசையில் நின்று, ஆர்வத்தோடு வாக்களித்து வருகின்றனர்.


 

 
ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் தமிழக முதலமைச்சரும், அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சி.மகேந்திரன், சுயேச்சை வேட்பாளராக டிராபிக் ராமசாமி உள்ளிட்ட 28 பேர் போட்டியிடுகின்றனர்.
 
இதைத் தொடர்நத் அங்கு வாக்குப் பதிவு நடைபெற்று வருகின்றது. அங்கு துணை ராணுவப்படையினர், வெளியூர் காவல்துறையினர் என சுமார் 1,000 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
 
ஆர்.கே.நகரில் 38 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, அங்கு துப்பாக்கி ஏந்திய துணை ராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
 
மேலும், வாக்குப் பதிவு மையங்களில் வெப்கேமரா பொருத்தப்பட்டு தலைமை அலுவலகத்திலிருந்து கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
 
வாக்காளர்கள் மிகுந்த சோதனைக்கு பின்னர் வாக்குச் சாவடிக்குள் அனுமதிக்கப்படுகின்றனர். வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.
 
 இந்த வாக்குப் பதிவு மாலை 5 மணிக்கு நிறைவடைகிறது.  இன்று பதிவாகும் வாக்குகள் வரும் 30 ஆம் தேதி எண்ணப்பபட்டு முடிவு அறிவிக்கப்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.