அதிக அளவில் நெல் கொள்முதல் நிலையங்களைக் திறக்க வேண்டும்: விஜயகாந்த்

அதிக நெல் கொள்முதல் நிலையங்களைக் திறக்க விஜயகாந்த் கோரிக்கை


K.N.Vadivel| Last Updated: திங்கள், 25 ஜனவரி 2016 (06:08 IST)
டெல்டா மாவட்டங்களில், அதிக அளவில் நெல் கொள்முதல் நிலையங்களைக் திறக்க வேண்டும் என  விஜயகாந்த் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
 
 
இது குறித்து, தலைவர் விஜயாகந்த் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
 
டெல்டா மாவட்டங்களில் அறுவடை செய்யப்பட்ட நெல்லை கொள்முதல் செய்ய தமிழக அரசு உரிய ஏற்பாடுகள் செய்யவில்லை.
 
நெல் கொள்முதல் நிலையங்கள் வழக்கமான எண்ணிக்கையில் திறக்கப்பட்டதாக அரசு தரப்பில் கூறப்படுகிறது.
 
மேலும், மிகமிகக் குறைவான அளவிலேயே திறக்கப்பட்டுள்ளன. அதனால், அறுவடை செய்த நெல்லை கொள்முதல் நிலையங்களுக்குக் கொண்டு செல்ல முடியவில்லை.
 
அப்படியே, நெல் கொள்முதல் நிலையங்களைத் தேடிச் சென்று கொடுத்தாலும், ஈரப்பதம் அதிகமாக இருப்பதாகக் கூறி, நெல்லை கொள்முதல் செய்ய மறுப்பதாக கூறப்படுகிறது.
 
இதனால், நெல் வியாபாரிகளிடமும், இடைத் தரகர்களிடமும் மிகக் குறைந்த விலைக்கு நெல்லை விற்பனை செய்ய வேண்டிய நிர்பந்தத்துக்கு விவசாயிகள் ஆளாக்கப்பட்டுள்ளனர்.
 
எனவே, டெல்டா மாவட்டங்களில் நெல்கொள்முதல் நிலையங்களைக் கூடுதலாகத் திறக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். 


இதில் மேலும் படிக்கவும் :