1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : சனி, 7 செப்டம்பர் 2019 (16:56 IST)

எதிர்ப்பு தெரிவித்த பெற்றோர்: தீக்குளித்த காதலன்... காப்பாற்ற முயன்ற காதலி...

சென்னை, வடபழனி துரைசாமி தெருவில் வசித்து வந்தவர் மொய்தீன். இவர், நந்தனம் பகுதியில் உள்ள ஒரு தனியார் கம்பெனிக்கு வேலைக்குச் சென்ற போது, அங்கு பணி செய்த மாலதி என்ற பெண்ணுடன் இவருக்குப் பழக்கம் ஏற்பட்டது. இந்தப் பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது. 
இந்நிலையில், திடீரென்று, மாலதி, கம்பெனிக்கு, வேலைக்கு வராமல் நின்றுள்ளார். அதனால், மாலதியின் வீட்டுக்குச் சென்று, இது குறித்து விசாரிக்கலாம் என தீர்மானித்தார் மொய்தீன்.
 
எனவே, எண்ணூரில் உள்ள மாலதியின் வீட்டுக்குச் சென்றுள்ளார் மொய்தீன். அப்போது மாலதியின் பெற்றோர் அவரை தடுத்ததாகக் கூறப்படுகிறது.

அதனால், வேதனையடைந்த மொய்தீன், தன் மீது பெட்ரோல் ஊற்றித் தீப் பற்ற வைத்துக்கொண்டார். அவரைக் காப்பாற்ற வந்த மாலதிக்கும் தீக் காயம் ஏற்பட்டது. 
 
பின்னர், இருவரையும் மீட்ட மக்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதில், மொய்தீன் சிகிச்சை பலனிலளிக்காமல் உயிரிழந்ததார்.

தற்போது, மாலதிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும்  சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.