சென்னைவாசிகளே எச்சரிக்கை..! இன்று மாலை முதல் அதி தீவிர கனமழை! – ரெட் அலர்ட் எச்சரிக்கை!
வங்க கடலில் உருவாகியுள்ள மிக்ஜாம் புயலால் இன்று மற்றும் நாளை சென்னை உள்ளிட்ட சில மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் மிக்ஜாம் புயலாக உருவாகியுள்ள நிலையில் சென்னையிலிருந்து 312 கி.மீ அப்பால் கடலில் மெல்ல நகர்ந்து வருகிறது. 5ம் தேதி கரையை கடக்கும் என கணிக்கப்பட்டுள்ள இந்த புயலால் சென்னை மற்றும் சுற்றுவட்டார மாவட்டங்களில் கடந்த சில நாட்களாகவே கனமழை பெய்து வருகிறது.
புயல் மெல்ல கரையை நெருங்கி வருவதால் இன்று மாலை முதலே சென்னையின் பல்வேறு பகுதிகளில் அதி தீவிர கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இன்று சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய 3 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
நாளை சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதனால் சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று மாலை தொடங்கி இரவில் பல பகுதிகளில் கனமழை பெய்ய கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.
Edit by Prasanth.K