1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 8 டிசம்பர் 2024 (09:37 IST)

டிசம்பர் 12ல் தமிழகத்தில் ரெட் அலெர்ட்! மிக கனமழை வாய்ப்பு! - இந்திய வானிலை ஆய்வு மையம் அலெர்ட்!

Rain

வங்க கடலில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகத்தில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

 

வடகிழக்கு பருவக்காற்று காரணமாக வங்க கடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதிகளால் தமிழ்நாட்டில் கடந்த சில வாரங்களாக கனமழை பெய்து வருகிறது. சமீபத்தில் உருவான ஃபெங்கல் புயல் பாண்டிசேரி அருகே கரையை கடந்ததால் விழுப்புரம், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன.

 

இந்நிலையில் தற்போது இலங்கை தாண்டி தெற்கு வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற உள்ளதாகவும், டிசம்பர் 11ம் தேதி வாக்கில் இலங்கை - தமிழகம் நோக்கி இது நகரத் தொடங்கும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

இதனால் டிசம்பர் 12ம் தேதியளவில் தமிழ்நாட்டின் ஓரிரு மாவட்டங்களில் அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. 

 

Edit by Prasanth.K