வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வெள்ளி, 5 ஏப்ரல் 2024 (09:14 IST)

ஓபிஎஸ் மனசாட்சி இரட்டை இலைக்கு வாக்கு கேட்டுள்ளது: ஆர்பி உதயகுமார்

r.p udhaykumar
ஓபிஎஸ் வேறு சின்னத்தில் சுயேட்சையாக போட்டியிட்டாலும் அவருடைய மனசாட்சி தன்னையும் அறியாமல் இரட்டை இலைக்கு வாக்கு கேட்டுள்ளது என்று முன்னாள் அமைச்சர் ஆர்பி  உதயகுமார் தெரிவித்துள்ளார்.

 ராமநாதபுரம் தொகுதியில் சுயேட்சை  வேட்பாளராக போட்டியிடும் ஓ பன்னீர்செல்வம் நேற்று தேர்தல் பிரச்சாரம் செய்தபோது தனது பலாப்பழம் சின்னத்திற்கு வாக்களியுங்கள் என்று கூறுவதற்கு பதிலாக பழக்க தோஷத்தில் இரட்டை இலை சின்னத்துக்கு வாக்களியுங்கள் என்று கூறினார்.

இதனை அடுத்து அவர் சுதாரித்து பழைய நினைவு வந்துவிட்டது அதனால் தவறாக கூறிவிட்டேன், பலாப்பழம் சின்னத்துக்கு வாக்களியுங்கள் என்று கூறினார். இது குறித்து முன்னாள் அமைச்சர் ஆர் வி உதயகுமார் பேசும்போது ’இரட்டை இலை தான் தனக்கு வாழ்வும் அடையாளமும் கொடுத்தது என்பது ஓபிஎஸ் இ மனசாட்சிக்கு தெரிந்துள்ளது அதனால்தான் அவர் மனசாட்சியுடன் இரட்டை இலைக்கு வாக்களிக்குமாறு கேட்டு உள்ளார் என்று தெரிவித்துள்ளார்

மனதில் ஒரு நிலைப்பாடு ஏற்பட்டு விட்டால் அதை உடனே மாற்ற முடியாது, இது மனித இயல்பு. ஆனால் ஓபிஎஸ் பதவிக்காக எந்த நிலைப்பாட்டை எடுத்தாலும் தொண்டர்கள் அதை ஏற்றுக் கொள்ளவில்லை மக்களும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று ஆர்பி உதயகுமார் தெரிவித்துள்ளார்

Edited by Siva