வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Modified: வியாழன், 4 ஆகஸ்ட் 2016 (13:12 IST)

நான் சாதியற்றவன் ; சாதிக்குள் என்னை அடைக்க வேண்டாம் : இயக்குனர் ரஞ்சித் வேண்டுகோள்

என்னை ஒரு குறிப்பிட்ட சாதிக்குள் அடைக்க வேண்டாம் என்று கபாலி பட இயக்குனர் ரஞ்சித் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


 

 
இயக்குனர் ரஞ்சித் அட்டகத்தி, மெட்ராஸ், கபாலி என்று இதுவரை மூன்று படங்களை இயக்கியுள்ளார். இந்த அனைத்துப் படங்களிலும் அவர் தாழ்த்தப்பட்ட சாதியை துக்கிப்பிடிப்பதாகவும், அவர் தன்னுடைய சாதியினருக்கு ஆதவராகவே திரைப்படங்களை எடுக்கிறார் என்றும் அவர் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
 
குறிப்பாக, கபாலி படத்தில், ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாக ரஜினி பேசும் வசனங்கள், ரஞ்சித்தின் குரலாக ஒலித்தது என்ற விமர்சனம் எழுந்தது.
 
இந்நிலையில் இது பற்றி கருத்து தெரிவித்த ரஞ்சித் “நான் சாதிப் பெருமை பேசும் ஆள் அல்ல. சாதியை ஒழிக்கவே நான் முயல்கிறேன். என்னை ஒரு சாதிப்பெயரோடு குறிப்பிடுவதை நான் விரும்பவில்லை. எனவே என்னை ஒரு சாதிக்குள் அடைக்க வேண்டாம். இன்னும் சொல்லப்போனால், நான் செய்யும் வேலைக்கு என்னை சாதியற்றவன் என்று அழைப்பதையே நான் விரும்புகிறேன்.
 
ஒரு குறிப்பிட்ட சாதியின் பக்கம் என்னை நிறுத்துவதை நான் ஆதரிக்க மாட்டேன். சுயசாதி பெருமையெல்லாம் எனக்கு கிடையாது.  அந்த பெருமை நாளடைவில் மற்றொரு சாதியை ஒடுக்க நினைப்பதில் போய் முடியும். எனவே சாதிப்பெருமை வேண்டாம்” என்று கூறியுள்ளார்.