1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: சனி, 17 செப்டம்பர் 2016 (14:49 IST)

ராம்குமார் மனநோயாளி ஆகிவிட்டாரா?: சிறைக்குள் என்ன செய்கிறார் தெரியுமா?

ராம்குமார் மனநோயாளி ஆகிவிட்டாரா?: சிறைக்குள் என்ன செய்கிறார் தெரியுமா?

சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ராம்குமார் தற்போது புழல் சிறையில் உள்ளார். சிறையில் தனிமையில் உள்ள ராம்குமார் மனநிலை பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.


 
 
ராம்குமார் சிறையில் யாரிடமும் பேசுவதும் இல்லையாம். யாரிடமும் பேச அனுமதிப்பதும் இல்லை. தனக்கு தானே சிரிப்பது, திடீரென அழுவது பின்னர் அப்படியே அழுதபடியே தூங்குவது போன்ற செயல்களை தான் ராம்குமார் சிறையில் செய்கிறாராம்.
 
சில நாட்களுக்கு முன்னர் அவரது வழக்கறிஞரும் ராம்குமார் மனதளவில் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறினார். இரவு தூக்கத்தில் பேசிக்கொண்டே இருக்கும் ராம்குமார் இரண்டு மணிக்கு எழும்பி கம்பியை பிடித்தபடி மணி கணக்கில் நிற்பதாகவும் செய்திகள் வருகின்றன.