செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Updated : செவ்வாய், 20 ஜூலை 2021 (20:40 IST)

எதிர்பார்ப்புகளுடன் காத்திருக்கிறேன்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் டுவிட்

பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் அவ்வபோது ஆக்கபூர்வமான கருத்துக்களை தெரிவித்து வருகிறார் என்பதும், சமூக அவலங்கள் மற்றும் அரசு செய்யும் தவறுகளை சுட்டிக் காட்டுதல் மற்றும் வன்னியர்களுக்கு தேவையானது ஆகியவற்றை அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார் 
 
இந்த நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த பல மாதங்களாக தனது கட்சி தொண்டர்களை சந்திக்காமல் இருப்பதை அவர் ஏக்கத்துடன் இன்று பதிவு செய்துள்ளார் அந்த டுவிட்டரில் அவர் கூறியிருப்பதாவது
 
என்று தணியும் இந்த கொரோனாவின் கொடுமை!
என்று முடியும் இந்த தனிமையின் வெறுமை!!
என்று நிகழும் எம் பாட்டாளி மக்களுடனான சந்திப்பு!!!
எதிர்பார்ப்புகளுடன் காத்திருக்கிறேன்.